ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிர்வாகக் கட்டமைப்பானது பரிபாலன சபையாகும். பரிபாலன சபையானது, நிறுவனத்தின் நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் எல்லாச் செயற்பாடுகளையும் பரிபாலனம் செய்வதோடு, கல்விச் செயற்பாட்டு விடயங்கள் பற்றிய குழு பரிபாலன சபையின் கீழ் உள்ளது. நிறுவனத்தின் செயற்பாடுகளின் அடிப்படையில் அது நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
01. சமூகப்பணிக் கல்லூரி
02. பயிற்சிப் பிரிவு
03. சமூக அபிவிருத்திக் கொள்கை, ஆய்வு மற்றும் வெளியீட்டு பிரிவு
04. நிர்வாக மற்றும் நிதிப் பிரிவு
இங்கு முதல் 3 பிரிவுகளும் கல்வி சார் செயற்பாடுகளில் ஈடுபடுவதோடு, இதில் சமூகப் பணிக் கல்லூரி பிரதான கல்வி சார் பாடநெறிகளை நடாத்திக் கொண்டு செல்கின்றது. இரண்டு வருட சமூகப் பணி டிப்ளோமா பாடநெறி, நான்கு வருட சமூகப் பணி இளமானிப் பட்டம், மற்றும் இரண்டு வருட சமூகப்பணி முதுமானிப் பட்டம் என்பவை இவற்றுள் பிரதானமானதாகும். இதற்கு மேலதிகமாக, பயிற்சிப் பிரிவினால் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறியும் மேலும் வெவ்வேறுபட்ட தூர இடங்களுக்கான நீண்ட, குறுகிய கால பயிற்சி நெறிகளையும் நடாத்துகின்றது. ஆய்வு மற்றும் வெ ளியீட்டுப் பிரிவு சமூக அபிவிருத்தி மற்றும் நலன்புரிகளுடன் தொடர்புபட்ட ஆய்வுகளை மேற்கொள்வதோடு, நிர்வாகப் பிரிவு நிறுவனத்தின் நிர்வாக மற்றும் நிதி விடயங்களை மேற்கொள்கின்றது. தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் பணிப்பாளர் நாயகம் ஒருவரின் கீழ் இயங்குகின்றது.




ஒழுங்கமைப்புக் கட்டமைப்பு