You are here:: பாடநெறி சமூகப்பணி இளமானிப் பாடநெறி அறிமுகம்

சமூகப் பணி இளமானிக் கற்கை

 

அறிமுகம்

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம் மூலம் நடாத்தப்படும் சமூகப் பணி இளமானிப் பட்டத்தின் நோக்கம் என்னவெனில், சமூக அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் சமூக நலன்புரிச் சேவை முகாமைத்துவத்துக்கான திறன் உள்ள பல் இனம் வாழும் இலங்கைக்குள் சமாதானமும் மற்றும் ஒன்றுகூடி வாழ்வதற்குமான திறன் உள்ள சமூகப் பணியாளர்களை உருவாக்குவதுமாகும்.

 

இது நான்கு வருட பூரண கால பாடநெறியாக அ​மைவதுடன் வகுப்பறை விரிவுரைகளையும் களப்பணிப் பயிற்சியையும்​ கொண்டுள்ளது.  2ஆவது மற்றும் 4ஆவது வருடங்களில் பூரண களப் பயிற்சியில் ஈடுபடவேண்டியுள்ளதோடு அது, நிறுவகத்தின் பீட மேற்பார்வையாளர் மற்றும் கள மேற்பார்வையாளர்களின் வழிகாட்டல் மற்றும் மேற்பாரவையின் கீழ் இடம்பெறும்.